மலையக மக்களின் பல்வேறு பட்ட பிரச்சினைகள் தொடர்பில் மலையக மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுக்ககளை

நடத்த விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறி இருப்பதை நாம் எதிரணியில் இருந்தபடி வரவேற்கிறோம். நீண்டகாலமாக, இந்திய வம்சாவளி மலையக மக்களின் அரசியல், சமூக, பொருளாதார பிரச்சினைகள் பற்றி நமது மக்கள் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனியாக பேச வேண்டும் என நான் வலியுறுத்தி வந்துள்ளேன். அதன்மூலம் இந்நாட்டின் முழுமையான குடிமக்களாக மலையக தமிழ் மக்களும் வாழும் நிலை ஏற்பட வேண்டும் என நாம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் எதிர்பார்க்கிறோம்.

இது இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தரப்பில் இருந்து வெளிப்பட்டு இருப்பது பற்றி மகிழ்ச்சியடைகிறோம். இனி இதை உரையுடன் நிறுத்தி விடாமல், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடைமுறையில் செய்து காட்டவேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,

எட்டாம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை பிரகடன உரை தினத்தன்று நாம், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் சபையில் பிரசன்னமாகி இருந்தோம். எம்முடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய எதிரணி கட்சிகளின் எம்பீகளும் சபையில் பிரசன்னமாகி இருந்தோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உரையை நேரடியாக எதிர்கொள்ளவே நாம் பாராளுமன்றத்துக்கு சென்றிருந்தோம். ஐக்கிய மக்கள் சக்தி எம்பிக்கள் சபையில் பிரசன்னமாகி இருக்கவில்லை. பாராளுமன்றத்துக்கு செல்லாமல் உரையை பகிஸ்கரிப்பது என்ற ஐக்கிய மக்கள் சக்தியின் முடிவு எம்முடன் சேர்ந்து எடுக்கப்படவில்லை. ஆகவே அதுபற்றி எமக்கு தெரியாது.

எதிர்வரும் தினங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முழுமையான உரை தொடர்பாக எமது கருத்துகளை நாம் பாராளுமன்றத்தில் வெளியிடுவோம். அதேவேளை, மலையக மக்களின் பல்வேறு பட்ட பிரச்சினைகள் தொடர்பில் மலையக மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுக்ககளை நடத்த விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறி இருப்பதை நாம் எதிரணியில் இருந்தபடி வரவேற்கிறோம். இதை உரையுடன் நிறுத்தி விடாமல், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடைமுறையில் செய்து காட்டவேண்டும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி