இலங்கையின் அரசியலமைப்பிலுள்ள 13ஆம் திருத்தத்தை நீக்கக் கோரி இன்று (08) கொழும்பில் தேரர்கள் ஒன்றுகூடி

போராட்டத்தை நடாத்தவுள்ளனர்.

5000 தேரர்களை கொழும்பிற்கு கொண்டு வந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுத்த தேரர்கள் 13 ஆம் திருத்தத்தை நீக்கவேண்டும் என்றனர்.

பதின்மூன்றாம் திருத்தத்தை அமுல்படுத்தக் கூடாது என ஜனாதிபதிக்கு நான்கு பிரதான பௌத்த பீடங்கள் கூட்டாக கடிதம் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அரசாங்கத்தினால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட தனிநபர் வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாட்டிலுள்ள பல தொழிற்சங்கங்கள் இன்று போராட்டத்தில் ஈடுபடுகின்றன.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் சுகாதார தொழிற்சங்கங்கள், அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம், பல்கலைக்கழ நிர்வாக அதிகாரிகள் சங்கம் மற்றும் பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர்கள் சங்கம் ஆகியன இன்று அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன.

அதேநேரம், நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளின் பணியாளர்களும் மதியத்துடன் வங்கிச் சேவைகளை நிறுத்தி, வரி வசூலிப்புக்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா எச்சரிக்கை

இன்றைய ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாகலாம் என்று, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.

அதன்படி கொழும்பிலுள்ள அமெரிக்க பிரஜைகள், இன்றைய தினம் மேற்கொள்ளப்படவுள்ள ஆர்ப்பாட்டங்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று திட்டமிடப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்கள் காரணமாக கொழும்பைச் சுற்றிப் பயணிப்பது கடினமாகலாம் எனவும் வீதிகள் மூடப்படும் சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பௌத்த பிக்குகள் முன்னணியினர் முற்பகல் 9.30 மணிக்கு விக்டோரியா பூங்காவில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த குழு இடம்மாறி கொழும்பு முழுவதும் செல்லலாம். தொழிற்சங்கங்களின் பேரவை பிற்பகல் 2 மணிக்கு யூனியன்பிளேஸ் ஹைப் பார்க் நோக்கி பேரணியாக செல்வதற்கு முன்னர் கோட்டை தொடருந்து நிலையம் மற்றும் மருதானை தொடருந்து நிலையம் ஆகிய இடங்களில் ஒன்றுகூடுவதற்கு திட்டமிட்டுள்ளது.

இந்த அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மோதலாக மாறி வன்முறையாக மாறும் என்று தூதரகம் எச்சரித்துள்ளது.

எனவே இலங்கையிலுள்ள அமெரிக்க பிரஜைகள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதிகளை தவிர்க்குமாறும், பெரிய கூட்டங்கள், எதிர்ப்புகள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி