தென்னிந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 கடந்த வாரம் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில்

இம்முறை பிக்பாஸ் போட்டியாளர்களுள் அதிக ரசிகர்களின் ஆதரவை பெற்ற போட்டியாளராக கொண்டாடப்பட்டவர்தான் இலங்கையைச் சேர்ந்த போட்டியாளரான ஜனனி.

பிக்பாஸ் வீட்டில் ஒரு செல்லப்பிள்ளையாக ஆரம்பத்தில் இருந்த ஜனனிக்கு பிக்பாஸ் வீட்டிலும் சரி உலக வாழ் தமிழ் சொந்தங்களாலும் சரி நாளுக்கு நாள் ஆதரவு அலை பெருகியிருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்பாராத விதமாக பிக்பாஸ் வீட்டிலிருந்து ஜனனி வெளியேற்றப்பட்டார். இது ரசிகர்களை பெரிதும் கவலை கொள்ளச் செய்ததுடன் பிக்பாஸ் வீட்டில் இறுதி வரை இவர் பயணிப்பார் என்றே பலரும் எதிர்பார்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து ஜனனிக்கு படவாய்ப்புக்கள் வரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக இளையதளபதி விஜய் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் ஜனனிக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறனதொரு நிலையில் இந்தியாவில் தங்கியிருக்கும் ஜனனி இடையிடையே தனது புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகின்றார்.

இந்நிலையில் தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வாரிசு படத்தில் வந்த ஜிமிக்கி பாடலுக்கு கறுப்பு சாரியில் ஏற்ப அசைந்தபடி ஜனனி இருக்கின்றார். குறித்த வீடியோ தற்போது ஏராளமான லைக்ஸ்களை பெற்று வைரலாகி வருகின்றது. 

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி