2009 மின்சார சட்டத்தின்படி, இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட கட்டண திருத்த முன்மொழிவை

துரிதப்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அத்துடன், இடைக்கால கட்டண திருத்தம் தொடர்பான அமைச்சரவையின் கோரிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சட்ட ஆலோசனையை பெற்றுக்கொள்ளவும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மின் கட்டணத்தை அதிகரிக்க விடாமல் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தடையாக இருப்பதால் அவரை அப்பதவியில் இருந்து நீக்குவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது என்று அறியமுடிகின்றது.

அரச நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவரை நீக்குவதற்கான யோசனை ஒன்றை நாடாளுமன்றுக்குக் கொண்டுவருவதற்குத் தீர்மானித்துள்ளனர்.

இதேவேளை, ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்கள் மின் கட்டணத்தை அதிகரிக்கும் அரசின் யோசனைக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

அந்த மூவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாக ஜனக ரத்நாயக்க தெரித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி