வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் ஐக்கிய இராச்சியத்தின்

வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் நிரந்தர துணைச் செயலாளர் சேர் பிலிப் பார்டன் ஆகியோர் 2023 ஜனவரி 17, செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து கலந்துரையாடினர்.

ஐக்கிய இராச்சிய - இலங்கை இராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டில் இந்த ஆக்கபூர்வமான இருதரப்பு ஈடுபாடு இடம்பெற்றது.

வெளிவிவகார செயலாளர் விஜேவர்தன, நாட்டின் தற்போதைய அபிவிருத்திகள் மற்றும் 2023ஆம் ஆண்டிற்கான சமூகப் பொருளாதார ஸ்திரத்தன்மை, நல்லிணக்கம் மற்றும் மீட்சிக்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து ஐக்கிய இராச்சியத்தின் நிரந்தர துணைச் செயலாளருக்கு விளக்கமளித்தார்.

நிரந்தர துணைச் செயலாளர் பார்டன், இலங்கையின் முயற்சிகளை ஊக்குவித்ததோடு, இது தொடர்பாக ஐக்கிய இராச்சியத்தின் ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார்.

பொருளாதார மீட்சி மற்றும் அபிவிருத்திக்கு இலங்கை அளிக்கும் முன்னுரிமையின் அடிப்படையில், ஐக்கிய இராச்சிய சந்தைக்கான வரியில்லாத அணுகலை வழங்கும்

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் வர்த்தகத் திட்டத்தின் கீழ், இலங்கையின் சுற்றுலா மற்றும் திறமையான தொழிலாளர் குடியேற்றத்தில் ஐக்கிய இராச்சியத்தின் பங்களிப்பை மேம்படுத்துதல் போன்ற துறைகளில் இலங்கையின் பொருளாதாரப் பங்காளித்துவத்தின் முக்கியத்துவத்தை வெளிவிவகார செயலாளர் எடுத்துரைத்தார்.

காலநிலை மாற்ற நோக்கங்களுக்கான எதிர்வினை உட்பட வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் 2030ஆம் ஆண்டளவில் 70% புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அடையும் இலங்கையின் இலக்கை அடைந்து கொள்வதில் இரு தரப்பினரும் பாராட்டினர்.

தற்போதுள்ள பன்முக ஈடுபாட்டை உயர்த்துதல் மற்றும் பரஸ்பரம் நன்மை பயக்கும் ஒத்துழைப்பின் பல துறைகளில் முடிவு சார்ந்த அணுகுமுறையின் மூலம் உறுதியான முடிவுகளை அடைதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட, 2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை - ஐக்கிய இராச்சிய உரையாடலைத் தொடங்குவதற்கு இரு தரப்பும் பரஸ்பர ஆர்வத்தை மீண்டும் வலியுறுத்தியது.

வெளிவிவகார செயலாளர் விஜேவர்தன மற்றும் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் நிரந்தர துணைச் செயலாளர் ஆகியோர், ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலங்கைப் பாரம்பரியத்தின் குறிப்பிடத்தக்க சமூகத்திலிருந்து வெளிப்படும் துடிப்பான மக்கள் உறவுகளைப் பாராட்டினர்.

பரஸ்பர நலனுக்காக அவர்களது கூட்டுறவை சிறப்பாகப் பயன்படுத்துவதற்காக வெளிநாட்டிலுள்ள இலங்கை சமூகத்துடன் மேலும் ஈடுபடுவதற்கான அரசாங்கத்தின் நோக்கம் குறித்து நிரந்தர துணைச் செயலாளருக்கு வெளிவிவகார செயலாளர் விஜேவர்தன விளக்கமளித்தார்.

நீண்டகால உறவுகளை முன்னோக்கி, முடிவுகளை நோக்குவதை பிரதிபலிக்கும் வகையில் இந்த ஆண்டு ஐக்கிய இராச்சிய - இலங்கை இராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூருவதற்கு இதன்போது ஒப்புக்கொள்ளப்பட்டது.

பிராந்திய மற்றும் சர்வதேச அபிவிருத்திகள் குறித்த கருத்துப் பரிமாற்றத்தில், இந்து சமுத்திர ஈடுபாட்டில் இலங்கையின் கொள்கை முன்னுரிமைகள் மற்றும் இந்த ஆண்டு இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டமை ஆகியன குறித்து வெளிவிவகார செயலாளர் விஜேவர்தன நிரந்தர துணைச் செயலாளருக்கு விளக்கினார்.

இந்த விஜயத்தின் போது, நிரந்தர துணைச் செயலாளர் சேர் பார்டன், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் ஜனாதிபதியின் தலைமைப் பணிப்பாளர் சாகல ரத்நாயக்க ஆகியோரை சந்தித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி