ஐக்கிய மக்கள் சக்தியுடன் தமது கட்சி ஒருபோதும் கூட்டணி அமைக்காது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்

செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசிக்கிறீர்களா என வினவப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்;

“இல்லை. ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒருபோதும் பேச மாட்டோம். காரணம், இடதுசாரிகளில் முற்போக்கான அரசியல் கூட்டணியை உருவாக்குவோம் என்று நம்புகிறோம். அதனால் நம்மை விட்டு பிரிந்த சிலர், எங்களை அங்கே தள்ள நினைத்தனர். எந்த நேரத்திலும் அத்தகைய நிலைக்கு செல்ல நாங்கள் தயாராக இல்லை” என்றார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி