அமைச்சரவை மறுசீரமைப்பு மற்றும் ஆறு மாகாணங்களுக்கான ஆளுநர் நியமன நடவடிக்கைகளை

இம்மாத இறுதிக்குள் நிறைவுப்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் இணக்கப்பாட்டுக்கு அமைய அமைச்சரவையை மறுசீரமைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக ஆளும் தரப்பின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.

தற்போதைய அமைச்சுக்களை காட்டிலும் மேலதிகமாக 12 அமைச்சுக்களை நியமிக்க அவதானம் செலுத்த்ப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களக்கு புதிய அமைச்சரவையில் முக்கிய அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன,பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயல்படும் அரசியல் தரப்பினருக்கும் அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன.

அத்துடன் 6 ஆளுநர்களை புதிதாக நியமிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மத்திய மாகாணம்,மேல் மாகாணம், சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களை ஆளுநர்களாக நியமிக்கவும், தெற்கு, வடமேல் மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்குக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களை ஆளுநர்களாக நியமிக்கவும் ஆளும் தரப்பிற்குள் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

விளையாட்டு, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, போக்குவரத்து,வனஜீவராசிகள் பாதுகாப்பு, சுகாதாரம், துறைமுகம், கைத்தொழில், மின்சாரம் மற்றும் சுற்றாடல் ஆகிய அமைச்சுக்களை மறுசீரமைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி