உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிஇ சுதந்திர ஜனதா சபை மற்றும் உத்தர லங்கா

கூட்டமைப்பு ஆகியன இணைந்து உருவாக்கிய புதிய கூட்டணியானது, ஒரு தலைவரின் கீழ் அல்லது ஒரு தலைமைத்துவ அமைப்பின் கீழ் போட்டியிட முன்வந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, புதிய கூட்டணிக்கு சுதந்திர மக்கள் கூட்டமைப்பு என பெயரிடவும் முன்மொழியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்று பிரதான குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று தலைவர்கள் அடங்கிய குழுவின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சுதந்திர மக்கள் கூட்டமைப்பை நிறுவுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என அவ்வமைப்பதில் முக்கிய பங்காற்றிய அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புதிய கூட்டணியின் நிறைவேற்று சபையில் நாற்பது வீதத்தை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் முப்பது வீதத்தை சுதந்திர ஜனதா சபைக்கும், எஞ்சிய 30 வீதத்தை உத்தர லங்கா கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய குழுக்களுக்கும் ஒதுக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

புதிய கூட்டணியை அமைப்பதற்கு தேவையான முதற்கட்ட பணிகள் தற்போது முடிவடைந்துள்ளதாகவும் இந்த வார இறுதியில் தனது பணிகளை முடிக்க முடியும் என எதிர்ப்பார்ப்பதாகவும் கூட்டணி அமைப்பதற்கு வேரூன்றிய அரசியல் கட்சி தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி