லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) ஜப்னா கிங்ஸ் அணிக்காக விளையாடிய யாழ். வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த்

பங்களாதேஷில் நடைபெறவுள்ள பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் (BPL) விளையாடவுள்ளார்.

LPL தொடரில் 8 இன்னிங்ஸ்களில் 13 விக்கெட்டுகளை சாய்த்து ஜப்னா கிங்ஸ் அணி ஹெட்ரிக் கிண்ணம் வெல்வதற்கு உதவியாக இருந்ததுடன், சிறந்த வளர்ந்துவரும் வீரருக்கான விருதையும் வென்றிருந்தார்.

BPL தொடரில் விளையாடவுள்ள 13 இலங்கை வீரர்கள்!

இந்தநிலையில் வியாஸ்காந்த் தற்போது BPL தொடரில் செட்டகிராம் செலஞ்சரங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அவருடைய முகாமையாளர் ஷியாம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் ஷியாம் குறிப்பிடுகையில், இளம் வீரருக்கு இதுவொரு சிறந்த வாய்ப்பு. இந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த அணிக்கு நன்றியாக உள்ளோம். அங்கு கிடைக்கும் அனுபவம் வியாஸ்காந்திற்கு அதிகமாக உதவும்” என்றார்.

LPL தொடரில் வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக்கொண்ட வியாஸ்காந்திற்கு வெளிநாட்டு தொடர் ஒன்றில் விளையாட கிடைக்கும் முதல் வாய்ப்பு இதுவாகும். வியாஸ்காந்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளபோதும், தொடருக்கு செல்வதற்கான அனுமதி இலங்கை கிரிக்கெட் சபையிடமிருந்து இதுவரை கிடைக்கவில்லை.

செட்டகிராம் செலஞ்சர்ஸ் அணியில் விஜயகாந்த் வியாஸ்காந்த் மாத்திரமின்றி இலங்கை வீரர்களான விஷ்வ பெர்னாண்டோ மற்றும் அஷான் பிரியன்ஜன் ஆகியவர்கள் ஏற்கனவே இடம்பெற்றுள்ளனர். அதுமாத்திரமின்றி வியாஸ்காந்த் உட்பட மொத்தமாக 14 இலங்கை வீரர்கள் BPL தொடரில் விளையாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

BPL தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர்கள்

செட்டகிரொம் செலஞ்சர்ஸ் – விஷ்வ பெர்னாண்டோ, அஷான் பிரியன்ஜன், விஜயகாந்த் வியாஸ்காந்த்
டாக்கா டொமினேட்டர்ஸ் – சாமிக்க கருணாரத்ன, டில்ஷான் முனவீர
குல்னா டைட்டன்ஸ் – அவிஷ்க பெர்னாண்டோ, தசுன் ஷானக
ராங்பூர் ரைடர்ஸ் – ஜெப்ரி வெண்டர்சே, பெதும் நிஸ்ஸங்க
சில்ஹெட் ஸ்ரைக்கர்ஸ் – கமிந்து மெண்டிஸ், திசர பெரேரா, தனன்ஜய டி சில்வா
போர்ச்சுன் பரிஷல் – குசல் ஜனித் பெரேரா, சதுரங்க டி சில்வா 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி