ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தேசிய ரீதியிலான 75ஆவது சுதந்திரதின கொண்டாட்டம்,

யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற உள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் மூன்று முக்கியமான நிகழ்வுகள் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன குறிப்பாக பெப்ரவரி நான்காம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது.

அதற்கு பின்னராக பெப்ரவரி 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு இருக்கின்ற கலாச்சார மத்திய நிலையத்தில் அதனுடைய ஒரு முழுமையான செயல்பாட்டு நிகழ்வோடு சுதந்திர விழா ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

அதற்கான ஆரம்ப கலந்தரையாடல் இன்று முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக கலாச்சார மத்திய நிலைத்தினுடைய ஒரு இணைப்பு முகாமைத்துவ குழுவில் இருக்கிற ஆளுநர் மற்றும் இந்திய துணை தூதுவரத்தின் அதிகாரிகள் மற்றும் யாழ் மாநகர சபையின் அதிகாரிகள் மத்திய கலாச்சார அமைச்சுடன் இணைந்ததாக கலாச்சார மத்திய நிலையத்தில் கலாச்சார நிகழ்வுகளை நடத்துவற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு ஒட்டியதாக சுதந்திரதின நிகழ்வினை முக்கியமாக மாகாண மட்டத்திலே இணைப்பான ஒரு விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி