மர்மமான முறையில் இறந்த தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான விசாரணையில், அவர் தற்கொலை செய்து

கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் புலனாய்வாளர்களிடம் பல ஆதாரங்கள் கிடைத்ததைத் தொடர்ந்து தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ஷாப்டரின் மரணத்தின் போது, கழுத்தில் கட்டப்பட்ட வயரைப் போன்ற ஒரு வயர் அவரது வீட்டிலிருந்ததை புலனாய்வாளர்கள் கண்டறிந்தபோது இந்த சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ஷாப்டரின் கைகளைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் சில கேபிள் இணைப்புகள் அவரது வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டன.

மரணத்துக்கான காரணம்

விசாரணையின் நடுவில், ஷாப்டர் தற்கொலை செய்து கொண்டாரா என்றும் விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர், ஆனால் ஷாப்டரின் மரணம் குறித்த பிரேத பரிசோதனையின் படி, ஜிப்-வயர் கேபிளால் கழுத்தை நெரித்தமை தான் மரணத்துக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத அடிப்படையில், இது கொலையா அல்லது தற்கொலையா என்பதை விசாரணைகள் நிராகரிக்கவில்லை எனவும் தொடர்பாக ஒவ்வொரு கோணத்திலும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருக்கின்றார்கள் எனவும் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் சம்பவம் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

காவல்துறை வெளியிட்ட விசேட அறிவிப்பு

பிரபல தமிழ் தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் ஊடகங்களில் பல்வேறு உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரப்பப்படுவது விசாரணைகளுக்கு இடையூறாக அமையும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நிலைமை சந்தேக நபர்களுக்கு நன்மை பயக்கும் எனவும் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உறுதிப்படுத்தப்படாத தகவல்

இதனால், உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பரப்புவதை தவிர்க்குமாறு காவல்துறை ஊடகப் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 15 ஆம் திகதி பொரளை மயானத்தில் வாகனத்தில் ஆபத்தான நிலையில் இருந்து மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஷாப்டர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பல திணைக்களங்கள் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி