உள்ளீடுகளை பெற்று விநியோகம் செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, இந்தப் பெரும்போகத்தில் எதிர்பார்த்த

அறுவடையை பெறுவது கடினமாகும் என பேராதனை பல்கலைக்கழக விவசாய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மரம்பே கூறுகிறார்.

பெரும்போக நெற்செய்கையில் சுமார் 15 சதவீதமான பயிர் இழப்பு ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

உரம் உள்ளிட்ட உள்ளீடுகள் தாமதமாகி வருவதால், பெரும்போகத்தில் சோள விளைச்சல் 50 சதவீதம் குறையலாம் என பேராசிரியர் புத்தி மரம்பே தெரிவித்தார்.

அடுத்த வருடம் ஏற்படக்கூடிய உலகளாவிய உணவு நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் முறையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும் பேராசிரியர் புத்தி மரம்பே மேலும் சுட்டிக்காட்டினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி