கோத்தாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்றுக் கொள்வதைத் தடுக்கும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த

மனுவை தள்ளுபடி செய்வதற்கு  மூவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன் நீதிபதிகளால் நேற்று (04) மாலை ஏகமானதாக தீர்மானித்ததையடுத்து  கோத்தாபய ராஜபக்ஷ தனது சகோதரர் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் அந்த சந்தோஷத்தை கேக் வெட்டி கொண்டாடி மகிந்த அதே நேரம் அவர்களது அடியாட்கள் ஐக்கிய தேசிய கட்சியினர்கள் சிலர் மீது தாக்குதலை மேற்கொண்டு வீடுகள் உடமைகளுக்கும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுணவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் இலங்கை பிரஜா உரிமையினை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்த போது  அதனை அவரது சட்டத்தரணிகளால் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறிவிக்கப்படடிருந்ததோடு, அவர் தான் கலந்து கொண்டிருந்த பேச்சுவார்த்தையின் நடுவில் இந்தத் தகவலைக் கேட்டு கைகளை உயர்த்தி மகிழ்ச்சியைக் காட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

72084822 169885157527839 178822702830714880 n

அதற்கு சற்று நேரத்திற்கு பின்னர் கோத்தாபய ராஜபக்ஷ அவ்விடத்திற்கு வருகை தந்து கேக் வெட்டி சந்தோஷத்தைக் கொண்டாடியுள்ளதாக “லங்கா சீ நிவ்ஸ்” செய்தி வெளியிட்டுள்ளது.

மொட்டு கட்சியினர் அவ்வாறு கேக் வெட்டி மகிழ்ச்சியைக் கொண்டாடிக் கொண்டிருந்த போது வழக்கு தீர்ப்பு ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து ஆக்ரோஷமடைந்த ஓபநாயக்க மொட்டு கட்சியின் வட்டார அமைப்பாளராக நிஹால் ஹபுஆராய்ச்சி உள்ளிட்ட குண்டர்கள் அப்பிரதேசத்தில் பிரபல ஐ.தே.கட்சி செயற்பாட்டாளர்கள் இருவரின் வீடுகள் மீது தாக்குதல் மேற்கொண்டு அவ்வீட்டாரை வெளியேற்றிவிட்டு அவ்வீடுகளுக்கு தீமூட்டியுள்ளதாக ஐ.தே.கட்சியின் சமூக வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஓபநாயக்கா பொலிஸார் இருவரைக் கைது செய்துள்ளதோடு பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று பிரதான சந்தேக நபரான நிஹால் ஹபுஆராய்ச்சியை கைது செய்ய விஷேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் ஐ.தே.கட்சியின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி