இலங்கையின் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் தேசிய அரசாங்கம் பற்றி பேசப்பட்டு வருகிறது. அந்த தேசிய அரசாங்கத்தில் பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் அரசாங்கம் தற்சமயத்தில் தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான அரசாங்கத்தின் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவங்ச கருத்து வெளியிட்டுள்ளார்.

கோவிட் தொற்று நோய் காலத்திலேயே தேசிய இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்திக்கொண்டிருக்க வேண்டும்.அந்த நேரத்தில் சர்வக் கட்சி மாநாட்டை நடத்துமாறு பல தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அரசாங்கம் அதனை செய்யவில்லை. அது நடந்து இருந்தால், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கும் அதனை பயன்படுத்தி இருக்கலாம்.

எனினும் தற்போது நிலைமை மாறியுள்ளது. நாட்டின் நிலைமை தற்போது படு மோசமாக மாறியுள்ளது. இதனால், இப்படியான நேரத்தில் தேசிய அரசாங்கத்தை அமைப்பது பெரும் மூடத்தனமான செயல்.

தேசிய அரசாங்கம் ஒன்றை தற்போது அமைக்க முடியாது. என நம்புகிறேன். நாட்டின் இன்றைய சூழ்நிலையில், தேசிய அரசாங்கத்தில் இணைய வரும் முட்டாள்கள் யார் என்பதை சிந்திக்கின்றேன். அப்படியான முட்டாள்கள் இருந்தால், தேசிய அரசாங்கம் அமையும் எனவும் விமல் வீரவங்ச தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான கேள்விகளுக்கும் பதிலளிக்கும் வகையில், 

நாட்டின் தற்போதைய  நிலைமையில் தேசிய அரசாங்கத்தை அமைப்பதை விட அடுத்த இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னெடுக்கக் கூடிய மாற்றமில்லாத தேசிய கொள்கையை உருவாக்குவது முக்கியம் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

“நான் பிரதமராக பதவிக்கு வந்தால், உங்களுக்கு அமைச்சு பதவிகளை தருகிறேன்” எனவும் ரணில் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டால், அதன் பிரதமர் பதவியை பெற்றுக்கொள்வீர்களா என நாடாளுமன்ற வளாகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கேட்ட போதே அவர் இதனை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது

அரசாங்கம் கூட்டவுள்ள சர்வக் கட்சி மாநாட்டில் தேசிய அரசாங்கம் தொடர்பான யோசனை ஒன்றை நிறைவேற்றி, அந்த அரசாங்கத்தின் பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்க உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி