பேருந்து மற்றும் முச்சக்கரவண்டி கட்டணங்களை உயர்த்த வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் என்பனவற்றினால் விற்பனை செய்யப்படும் எரிபொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

எனவே இந்த எரிபொருள் விலை ஏற்றத்திற்கு அமைய பேருந்து கட்டணங்களை குறைந்தபட்சம் 50 வீதத்தினால் உயர்த்த வேண்டுமென அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஆகக்குறைந்த கட்டணம் முதல் அனைத்து கட்டணங்களும் உயர்த்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முச்சக்கரவண்டி கட்டணத்தையும் அதிகரிக்கும் வகையிலான யோசனையொன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவிக்கையில்,
முதல் கிலோமீட்டருக்கு 80 ரூபாவும், இரண்டாவது கிலோமீட்டருக்கு 50 ரூபாவும் முச்சக்கரவண்டி கட்டணமாக அறவிடப்படுவது நியாயமானது என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணிகளை கருத்தில் கொண்டு பார்க்கும் போது இது நியாயமான விலை அதிகரிப்பாகும் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி