வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கணிசமான அளவில் அதிகரிக்க இலங்கையில் முதலீடு செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு நீண்ட கால வீசா வழங்குவதற்கான யோசனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டு அமைச்சரவையும் அதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில்,
இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி மற்றும் டீசல் தட்டுப்பாடு காரணமாக நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தமது பயணங்களை நிறுத்தியுள்ளதாக சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றதாக கூறப்படுகின்றது.

ஹோட்டல்களில் மின்வெட்டு ஏற்பட்டால் டீசலில் இயங்கும் ஜெனரேட்டர்கள் மூலமே மின்சாரம் தயாரிக்கப்படுகிறது என ஹோட்டல் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

அதேவேளை வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் பயணங்களுக்கு எரிபொருளை வழங்க முடியாமல் உள்ள நிலையில், யால மற்றும் ஏனைய பூங்காக்களும் வேகம் குறைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், ஹோட்டல்களில் உணவு தயாரித்தலுக்கும் கேஸ் தட்டுப்பாடு காரணமாக நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த காரணங்களால் சுற்றுலாப் பயணிகள் விரக்தியுடன் இலங்கையை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாகவும், இது சுற்றுலாத் துறைக்கு பலத்த அடி எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி