வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கணிசமான அளவில் அதிகரிக்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, இலங்கையில் முதலீடு செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு நீண்ட கால வீசா வழங்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டரில் இது குறித்த தகவலை பதிவிட்டுள்ளார்.

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும் கைத்தொழில்துறை அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவும் வெளிநாட்டு முதலீடுகளை பற்றி கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் கொள்ளுப்பிட்டியிலுள்ள கைத்தொழில் அமைச்சில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னரே வெளிநாட்டு முதலீடுகளை பற்றி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்தார்.

அவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும்,

நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினை நிலமையில் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டியது முக்கியமானது என்றும்,

நாட்டிற்கு தற்போது வெளிநாட்டு முதலீடுகள் கொண்டுவரப்படுகின்றன என்றும் கருத்துத் தெரிவித்திருந்தார்.

மேலும் இத்திட்டம் இலங்கையில் முதலீடு செய்வதற்கும், வேலை செய்வதற்கும், வாழ்வதற்கும் அதிகமான தொழில் வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களை ஊக்குவிக்கும் என நாமல் ராஜபக்ச கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி