இலங்கை சர்வதேச மட்டத்தில் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கு மாற்று உத்திகளைக் கையாள வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் Michelle Bachelet சபையில் அழைப்பு விடுத்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் நேற்று வெள்ளிக்கிழமை (4) நடைபெற்ற 49ஆவது அமர்வில் இலங்கை தொடர்பான விவாதத்தில் தனது எழுத்து மூலமான அறிக்கையை வெளியிட்டு உரையாற்றுகையிலேயே ஆணையாளர் Michelle Bachelet இதனைத் தெரிவித்தார்.

"தற்போதைய அரசாங்கம் பொறுப்புக்கூறலைத் தொடர விருப்பமின்மையை மட்டும் வெளிப்படுத்தவில்லை - அது போர்க்குற்றங்கள் என்று கூறப்படும் இராணுவ அதிகாரிகளை அரசாங்கத்தின் மிக உயர்ந்த பதவிகளில் இணைத்து, தண்டனையின்மையை வலுப்படுத்தியுள்ளது," என்று அவர் கூறினார். “இந்தக் காரணங்களுக்காகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது நிவாரணம் வழங்கவும்.

சர்வதேச மட்டத்தில் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கு மாற்று உத்திகளைப் பின்பற்றுமாறு நான் சபைக்கு அழைப்பு விடுத்துள்ளேன்,” என்றார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் உடனான அரசாங்கத்தின் ஈடுபாடு அதிகரிப்பதற்கான சில சமீபத்திய அறிகுறிகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சில விதிகளைத் திருத்துவதற்கும், சட்டத்தின் கீழ் சில கைதிகளை விடுதலை செய்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றமை வரவேற்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார். "பயங்கரவாதத் தடைச் சட்டம் மீதான அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும், குற்றச்சாட்டுகள் இன்றி கைது செய்யப்பட்டுள்ளவர்களை தண்டனையிலிருந்து விடுபடுவதற்கும், கடந்த கால மீறல்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கும், ஆழமான சட்ட, நீதிஸ்தாபன மற்றும் பாதுகாப்புத் துறை சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், அரசாங்கத்தை நான் வலியுறுத்துவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பொறுப்புக்கூறலில் கடந்த ஆண்டு மேலும் தடைகளையும் பின்னடைவையும் கண்டுள்ளமை வருத்தம் அளிப்பதாகவும் அவர் கூறினார். பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் உண்மையும் நீதியும் தொடர்ந்து மறுக்கப்படுகிறது. சிவில் சமூக அமைப்புக்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பொலிஸார், புலனாய்வுப்பிரிவினரால் துன்புறுத்தப்படுவதும் அச்சுறுத்தப்படுவதுமாக வெளியாகும் தகவல்கள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன் என்றார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி