மின்சாரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி, தீப்பந்தம் மற்றும் டோர்ச் லைட் ஏந்திய போராட்டமொன்று நேற்றிரவு(வியாழக்கிழமை) மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.


மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு மற்றும் பெரிய கல்லாறுக்கு இடைப்பட்ட பாலத்தில் நேற்றிரவு 8.30 மணியளவில் ஒன்றுகூடியவர்களால் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.


தற்போது நாட்டில் பரவலாக பல மணிநேர மின்சாரத்தடை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற நிலையில் மக்களின் பாதிப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.


இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


குறித்த போராட்டத்தில் பங்கேற்று கருத்து வெளியிட்ட இரா.சாணக்கியன், நாடளாவிய ரீதியில் இந்த போராட்டத்தினை விஸ்தரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.


இதேவேளை, இதேபோன்றதொரு போராட்டம் நேற்றிரவு யாழ்ப்பாணத்திலும் முன்னெடுக்கப்பட்டிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

 

WhatsApp Image 2022 03 04 at 9.29.56 AM

WhatsApp Image 2022 03 04 at 9.30.02 AM

WhatsApp Image 2022 03 04 at 9.30.01 AM 1

 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி