ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக மற்றுமொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் இலங்கையின் பொருளாதாரம் மேலும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் 2022 பெப்ரவரி 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள்  குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளமை உள்ளிட்ட காரணங்களினால் இலங்கை மீது ஏற்கனவே அதிருப்தியான நிலைமை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். 

“இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் இலங்கையின் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும். ஒரு  நாட்டில் முதலீடு செய்வதைக் கருத்தில் கொள்ளும்போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கவனிக்கும் ஒரு முக்கியமான காரணி  அந்த நாட்டில் சட்டத்திட்டங்கள் ஒழுங்காக நிலைநிறுத்தப்படுகிறதா என்பதாகும்.

 எனினும், ஐநா சட்டத்தை நிலைநாட்டத் தவறிவிட்டது  என இலங்கை  மீது  தீர்மானத்தை நிறைவேற்றினால் எந்த முதலீட்டாளரும் முதலீடு செய்ய வரமாட்டார்கள்” என்று அவர் கூறினார்.அதேவேளையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சமீபத்தில்  விலை அதிகரிப்பை மேற்கொண்ட நிலையில் தற்போது லங்கா IOC ஐ விடவும்  அதிக சதவீதத்தால் எரிபொருள் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சமீபத்தில்  இதற்கான காரணத்தை அரசாங்கம் நாட்டுக்குக் தெளிவுபடுத்த வேண்டும்" என்று அவர் கூறினார்

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

16

 

17

18 19

20

21 22


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி