இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து இதுவரை கைப்பற்றப்பட்ட சொத்துக்களில், ‘தெமட்டகொட ருவானில்’ கைப்பற்றப்பட்ட சொத்துக்களே அதிக மதிப்புடையவை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


தெமட்டகொட ருவானிடம் இருந்து இதுவரை கைப்பற்றப்பட்ட சொத்துக்களின் மொத்த பெறுமதி 790 மில்லியன் ரூபா என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


தமக்கு எதிராக நடைபெற்று வரும் விசாரணைகளை நிறுத்துமாறு வலியுறுத்தி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு 50 மில்லியன் ரூபாய் லஞ்சம் வழங்க சந்தேக நபர் முயன்றதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
சந்தேகநபர் 2011ஆம் ஆண்டு கஞ்சா விற்பனையில் மூலம் சட்டவிரோத வியாபாரத்தை ஆரம்பித்து 2017ஆம் ஆண்டு முதல் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவரிடமிருந்து 90 மில்லியன் ரூபா, பெறுமதியான 09 அதி சொகுசு வாகனங்கள் தற்போது அரச உடைமையாக்கப் பட்டுள்ளன.
மொத்தம் 90 மில்லியன் ரூபா, பெறுமதியான 03 சேமிப்பு கணக்குகளை போலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இத்தோடு 20 மில்லியன் ரூபா பெறுமதியான 1.5 கிலோ தங்கம் மற்றும் 160 மில்லியன் ரூபா, பெறுமதியான மூன்று நிலங்களையும் நபரிடம் இருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இவருக்கு சொந்தமான பல விடுதிகளிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, வெலே சுதாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 180 மில்லியன் ரூபா இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட அதிகூடிய பெறுமதியான சொத்துகளாகக் கருதப்பட்டது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH

 

 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி