ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி உயர் நீதிமன்ற நீதிபதிகளாக 15 பேரின் பெயர்களை அங்கீகரித்ததன் காரணமாக நீதித் துறையில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக நீதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உயர் நீதிமன்றில் தற்போது 08 வெற்றிடங்களே காணப்படும் நிலையில் இவ்வாறு 15 பேரின் பெயர்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை இந்த நெருக்கடிக்கு காரணமாகியுள்ளது.

மேற்படி ஆதாரங்களின்படி, இந்த 08 வெற்றிடங்களுக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஆறு (06) நீதித்துறை நீதிபதிகள் மற்றும் இரண்டு (02) சிரேஷ்ட சட்டத்தரணிகளை நியமிக்க முதலில் முன்மொழியப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த வெற்றிடங்களுக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து 04 பேரின் பெயர்களை சட்டமா அதிபர் சிபாரிசு செய்துள்ளதுடன், நீதித்துறையைச் சேர்ந்த 11 நீதிபதிகளின் பெயர்கள் பிரதம நீதியரசரால் பரிந்துரைக்கப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரின் பெயர்களையும் ஜனாதிபதி அங்கீகரித்துள்ள நிலையில், அவ்வாறு நியமிக்கப்பட்ட 08 நீதிபதிகளுக்கும் கடமைகளை வழங்குவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக நீதித்துறை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

 

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH

 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி