கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்சவின் தனிப்பட்ட முகநூல் கணக்கு ஹேக் செய்யப்பட்டு அரசாங்கத்தை விமர்சித்து சில பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதனையடுத்து குறித்த பதிவுகளுக்கும் தமக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை என அமைச்சர் விமல் வீரவங்ச உறுதிபடத் தெரிவித்தார். சில நாட்களாக தனது கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும், இது குறித்து தாம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அமைச்சர் ஒரு பதிவில் கூறியுள்ளார். அ

திஷ்டவசமாக கணக்கை முழுமையாக மீட்டெடுத்துள்ளதாக தெரிவித்த அவர் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கணக்கை ஹேக் செய்த நபரால் பல பதிவுகள் பகிரப்பட்டதையடுத்து தன்னை விமர்சித்து இந்த பதிவுகளுக்கு நூற்றுக்கணக்கான கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாகவும் அமைச்சர் விமல் வீரவங்ச கூறியுள்ளார்.

“குறித்த காலகட்டத்தில் கணக்கை ஹேக் செய்து வைத்திருப்பவர் பகிர்ந்த பதிவுகள் குறித்து ஆராயாமால் கருத்து தெரிவித்து மோதல்களை ஏற்படுத்த முயன்றவர்கள் தொடர்பில் தாம் கவலை அடையவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH

 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி