இலங்கைக்கு போதியளவு டீசல் கையிருப்பு கிடைத்துள்ளதுடன், எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.


நாட்டில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சுழ்நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.


லங்கா IOC நிறுவனம், பெப்ரவரி 06 நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை உயர்த்துவதாக அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் (CPC) விலையேற்றத்திற்கு செல்ல அரசாங்கத்திடம் அனுமதி கோரியது.


எவ்வாறாயினும், லங்கா IOC நிறுவனம் தனது எரிபொருள் விலையை அதிகரித்ததையடுத்து, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டி ஏற்பட்டது.


இதனால் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதேவேளை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்திடமிருந்து (IOC) 40,000 மெற்றிக் தொன் எரிபொருளை இலங்கையின் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் கையளித்தார்.


அந்நியச் செலாவணி நெருக்கடி, மின் உற்பத்தி நிலையங்களுக்கு டீசல் கொள்வனவு செய்வதில் தடையாக உள்ளது.


இதன் விலைவாக ஏற்படக் கூடிய மின்வெட்டைத் தடுக்க நாடு முயல்வதால், இந்த மாத தொடக்கத்தில், எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக, இந்தியாவுடன் 500 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திட்டது.


எனவே தற்போதைய சூழ்நிலையை சமாளிக்க இது போதுமான இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.
11
​
12
https://bit.ly/3uHGkH6

13

 

14

15 16

17

18 19

 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி