இலங்கை தொடர்பான தீர்மானங்களைத் தொடர்ந்து, நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து விவாதிக்க சர்வதேச நாணய நிதியம் (IMF) அடுத்த வாரம் கூடவுள்ளது.

இந்த கூட்டத்தின் பின்னர் நாடு தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் மேற்கொள்ளக்கூடிய அடிப்படை நடவடிக்கைகள் குறித்து நாட்டுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க  நேற்று (14) பிற்பகல் சிவில் சமூக ஆர்வலர்கள் குழுவை அவரது இல்லத்தில் சந்தித்த போதே இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக பொருளாதார துறையில் தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்கள் பலருடன் கலந்துரையாடியதாகவும், நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகவும் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாட்டை கட்டியெழுப்புவதற்காக இந்த கூட்டத்தின் பின்னர், அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்துவதற்காக  அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களுடனும் மற்றும் பல முக்கிய தொழில்அதிபர்களுடனும் பல சுற்று கலந்துரையாடல்களை நடத்த உள்ளதாக முன்னாள் பிரதமர் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பல இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் அரசாங்கம் ஏன் கையொப்பமிடவில்லை என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வினவிய போது, ​​சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை மற்றும் பொதுக்கடன் மற்றும் கடன் சேவைகள் தொடர்பான அறிக்கைக்கு பின்னர் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அவர் தெரிவித்தார். 

இந்த விடயத்தில்  ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியின் அனைத்து பிரிவினருடனும் கலந்துரையாடி பொதுவான நிலைப்பாட்டை எட்ட வேண்டும்  என்றார்.

இந்த விடயத்தில் சுமந்திரனின் ஈடுபாட்டை பாராட்டிய ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிக்கு பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வு காண அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.
11
​
12
https://bit.ly/3uHGkH6

13

 

14

15 16

17

18 19


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி