ஒன்பது நாட்களாக சுகாதாரத்துறையுடன் இணைந்த 18 தொழிற்சங்கங்கள் முன்னெடுத்திருந்த தொழிற்சங்கப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளன.

ஒன்பது நாட்களாக சுகாதாரத்துறையுடன் இணைந்த 18 தொழிற்சங்கங்கள் முன்னெடுத்திருந்த தொழிற்சங்கப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளன.அதன்படி நாளை (16) காலை 8.00 மணி முதல் வேலை நிறுத்தம் கைவிடப்படும் என தொழிற்சங்கங்கள்  அறிவித்துள்ளன.

எவ்வாறாயினும், தமது கோரிக்கைகள் குறித்து ஜனாதிபதி  தலையிடும்வரை இரண்டு வாரங்களுக்கு வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்த சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.அத்தோடு, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஊடகங்களுக்கு முன் பேசப்பட்ட விடயங்களை திரிபுபடுத்தி, பிரச்சினையை நீண்ட காலமாக இழுத்தடிப்பு  செய்து வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தமது பிரச்சினைகளுக்க ஏற்றுக்கொள்ளும்வகையிலான தீர்வுகளை ஜனாதிபதி வழங்கத் தவறினால், எந்த நேரத்திலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தயங்க மாட்டோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

18 தொழிற்சங்கங்களில் ஒன்றான தாதியர் உத்தியோகத்தர் சங்கம், அண்மையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு காரணமாக வார இறுதியில் தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக கைவிடுவதற்கு  தீர்மானித்திருந்தது.

தமது ஏழு கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வுகாணத் தவறியதைக் கண்டித்து அரச சுகாதாரப் பணியாளர்கள் திங்கட்கிழமை (7) காலை 7.00 மணி முதல் காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

 

10

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.
11
​
12
https://bit.ly/3uHGkH6

13

 

14

15 16

17

18 19


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி