வாகன இறக்குமதிக்கான தடையை மீறி வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவில்லை என இலங்கை சுங்கத் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் இரண்டு புதிய சொகுசு ரக “Cadillac Escalade” கார்கள் ஏற்றிச் செல்லப்பட்டமை தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வாகனங்கள் எவ்வாறு நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது என பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர்.


இதற்கு பதில் அளித்துள்ள சுங்க பிரதிப் பணிப்பாளரும் (சட்ட) ஊடகப் பேச்சாளருமான சுதத்த சில்வா, கடுவெல முதலீட்டுச் சபையின் (BOI) கீழ் பதிவுசெய்யப்பட்ட இலங்கை வாகன பழுதுபார்க்கும் தொழிற்சாலையினால் பெறுமதி கூட்டப்பட்டதன் பின்னர் மீள் ஏற்றுமதி நோக்கங்களுக்காக மேற்படி வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


பெப்ரவரி 11 அன்று, மேக் மரியா சவேரியா என்ற கப்பலில் குறித்த இரண்டு காடிலாக் எஸ்கலேட் வாகனங்களும் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில் கனடாவுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்ய தேவையான ஆவணங்களை நிறுவனம் வைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

 

10

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.
11
​
12
https://bit.ly/3uHGkH6

13

 

14

15 16

17

18 19


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி