கடந்த காலத்தைப் பற்றி விவாதிப்பதை விட, நாட்டை எவ்வாறு மீளக் கட்டியெழுப்புவது என்பது தொடர்பில் பொது மேடையில் கலந்துரையாடுவது அவசரமான விடயம் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் பொதுக்கடன் மற்றும் கடன் சேவைகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் அவர் நேற்று (10) பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியலமைப்பில் 148 ஆம் இலக்க உறுப்புரிமையில் இந்த பாராளுமன்றத்திற்கே அரச நிதி நிர்வாக அதிகாரம் உள்ளது.

இதன்படி அரச நிதிகள் தொடர்பான தெரிவுக்குழுவில், சகல மாதங்களிலும் பாராளுமன்றம் கூடும் முதல் வாரத்தில் அரச கடன் தொடர்பிலும் கடன் சேவைகள் தொடர்பிலும் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்கின்றேன்.

அத்துடன் அரசாங்கத்தின் நாணய இருப்பு தொடர்பிலும் கூறப்பட வேண்டும்.

இந்நிலையில் தற்போது முன்வைக்கப்படும் நாணய இருப்புகள் தொடர்பான தகவல்களில் சீனா, இந்தியாவில் இருந்து கொடுக்கும் கடன்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அவை தனியாகவே வழங்க வேண்டும். தற்போது ஒரு பில்லியன் டொலரை விடவும் குறைவான தொகையே தற்போது இருப்பில் இருப்பதாக கூறப்படுகின்றது.

இதனால் ஒவ்வொரு மாதமும் இது தொடர்பான தகவல்களை வழங்கினால் அரச நிதியின் நிலைத் தன்மையை பேணலாம்.

இதேவேளை சர்வதேச நாணய நிதியமும், இலங்கை அரசாங்கமும் கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பான அறிக்கையை இந்த சபையில் சமர்பிக்குமாறும் நாங்கள் கேட்கின்றோம் என்றார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி