ஸ்ரீலங்காவின் 74 ஆவது சுதந்திர நாளான இன்று  முல்லைத்தீவில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் பாதிக்கப்பட்ட தரப்பினர் அனைவரும் ஒன்றிணைந்து காணாமல் ஆக்கப்பட்டவருக்கான நீதியினை சர்வதேசத்திடம் வலியுறுத்தியும், ஸ்ரீலங்காவின் சுதந்திரதினம் தமிழர் தேசத்தின் கரிநாள் என்ற கோசத்தோடு அவர்கள் இந்த போராட்டதை முன்னெடுத்தனர்.

இதன்போது  இன அழிப்பின் நினைவுச்சின்னமாக காணப்படும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அணிதிரண்ட வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,மக்கள் பிரதிநிதிகள் முன்னதாக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உயிரிழந்த மக்களின் நினைவாக சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தினர்.

இதனையடுத்து அவர்கள்  கவனயீர்ப்பு பேரணியினை தொடங்கி நடைபயணமாக முல்லைத்தீவு நோக்கி புறப்பட்டு   வட்டுவாகல் கோட்டபாய கடற்டை தளத்தின் முன்னால் நின்று கோக்ஷங்களை உரக்க வெளிப்படுத்தினார்கள்.

அதனைத்தொடர்ந்து வட்டுவாகல் பாலத்தில் தீ பந்தங்கைள ஏந்தியாவாறு 2009 ஆம் ஆண்டு இந்த பாலம் ஊடாகவே தங்கள் உறவுகளை , கணவன்மார்களை இராணுவத்தினரிடம் கையளித்துவிட்டு அனைத்தையும் இழந்து இராணுவ கட்டுப்பாட்டிற்குள் சென்ற இறுதி இடமான பாலத்தில்   சிறிதுநேரம் நின்று,   தீ பந்தம் ஏந்தியும் கறுப்புகொடிகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் முல்லைத்தீவு செல்வபுரம் வரை கோசங்களை எழுப்பியவாறு சென்று செல்வபுரம் புனித யூதா தேவாலயம் வரை சென்றடைந்தும்  பேரணி நிறைவுபெற்றது.

இந்த கவனயீர்ப்பு பேரணியின் போது முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு நிலமீட்பு போராட்ட குழுவினர் , கடந்தவருடம் பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு அண்மையில் விடுதலை செய்யப்பட்டவர்கள், அரசியல் கைதிகளுக்கான குரலற்றவர்களின் குரல் அமைப்பினர், யாழ் பல்கலை கழக மாணவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் , முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ரவிகரன் , சிவாஜிலிங்கம் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொணடிருந்தனர்.

இதேவேளை  கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பித்த இடம் முதல்  நிறைவடைந்த இடம்வரை சிவில் உடை தரித்த புலனாய்வாளர்கள்  தீவிர கண்காணிப்பை மேற்கொண்டிருந்ததுடன்,    போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும்   ஒளிப்படங்கள் எடுத்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGallery

 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி