அவுஸ்திரேலியாவில் இலங்கையர் பிள்ளைகளையும் கொன்று தானும் தற்கொலை! நண்பர் வெளியிட்ட பதிவு

அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டமை பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேர்த் நகரில் வசிக்கும் இந்திக குணதிலக என்று அடையாளம் காணப்பட்டுள்ள 40 வயது இலங்கையர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்திக குணதிலக்க, அவரது மகன் 6 வயது கோஹன், மகள் 4 வயது லில்லி ஆகியோர் வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் மற்றொரு குடும்ப உறுப்பினரால் அவர்களது வீட்டிற்குள் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.

குழந்தைகள் உயிரிழந்த நிலையில் படுக்கையில் இருந்ததாகவும், 40 வயதான தந்தை வீட்டின் கேரேஜில் இறந்து கிடந்ததாகவும் அவுஸ்திரேலிய பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த நபர் தனது மனைவியை பிரிந்து வாழ்பவர். வெள்ளிக்கிழமை பிள்ளைகள் தாயாரிடம் செல்ல வேண்டிய நாள். பிள்ளைகளை அழைத்துச் செல்வதற்காக தாய் முன்னரே தீர்மானிக்கப்பட்ட இடத்திற்குச் சென்றபோது அவர்கள் அங்கு இருக்காததால் கணவர் வீட்டுக்கு அருகிலிருந்த உறவினர்களிடம் விசாரித்துள்ளார். உறவினர் சென்று பார்த்தபோது உடல்களைக் கண்டு பொலிசாருக்கு அறிவித்ததாகக் கூறப்படுகிறது.

மிகுந்த மன அழுத்தம் மற்றும் மனரீதியான பிரச்சினையில் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே குணதிலக இம்முடிவை அவர் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

உடல்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அவர்கள் அனைவரும் கடற்கரையில் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு படத்தை குணதிலக பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.

கிறிஸ்மஸுக்கு முன் குணதிலக தனது பேஸ்புக் பக்கத்தில் 17 நிமிட வீடியோவை வெளியிட்டார், அதில் அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டதாகவும், உளவியலாளரை சந்தித்து வருவதாகவும் உறுதிப்படுத்தினார்.

இது குறித்து பேஸ்புக்கில் குணதிலகவின் நண்பர் ஒருவர் எழுதிய பதிவில், 'உன்னை காப்பாற்ற முடியாததற்கு என்னை மன்னித்து விடு இந்திக குணதிலக' என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

குணதிலகவின் தெருவில் வசிக்கும் பலரும் இச்சம்பவத்தால் அதிர்ச்சியில் உறைந்துள்ளதுடன் தமது வேதனைகளையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இது குறித்து அயலவர் ஒருவர் கூறுகையில், இந்த பகுதி எப்போதும் அமைதியாக இருக்கும், குணத்திலக குடும்பமும் பெரியளவில் வெளியே வர மாட்டார்கள். டிவியில் கிரிக்கெட் பார்த்து கொண்டிருந்த போது பொலிஸ் சைரன் சத்தம் கேட்டது. இச்சம்பவம் உண்மையிலேயே பயங்கரமானது, அதிர்ச்சியளிக்கிறது என கூறியுள்ளார்.

குணதிலக பிள்ளைகளை கொன்றுவிட்டு உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் உள்ள பல குடும்பங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ள நிலையில் அவர்கள் அதிலிருந்து மீள கவுன்சலிங் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.
https://chat.whatsapp.com/GZOGo5j8CI1KyIL2UwXAMe


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி