இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 75,000 ஐ தாண்டியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.



ஜனவரி முதலாம் திகதி முதல் 29ம் திகதி வரை 76,538 சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இந்த காலகட்டத்தில் ரஷ்யாவில் இ ருந்து 12,368 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியாவில் இருந்து 11,028 பேரும், உக்ரைனில் இருந்து 7,427 பேரும் வந்துள்ளனர். இங்கிலாந்தில் இருந்து 6,929 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியில் இருந்து 4,902 சுற்றுலாப் பயணிகளும், பிரான்சிலிருந்து 3,337 சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளனர்.

சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் அண்மைய அறிக்கையின்படி, போலந்து, அவுஸ்திரேலியா, மாலைதீவு, கஜகஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

2021ஆம் ஆண்டு நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 194,495 ஆகும். அந்த ஆண்டு ஜனவரியில் 1,682 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே இலங்கைக்கு வந்தனர்.

இந்த ஆண்டு 1.1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை அதிகரிப்பதற்காக அரசாங்கம் ஏற்கனவே குறுகிய, நடுத்தர, நீண்ட கால வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொவிட் ஓமிக்ரோன் பிறழ்வு பரவியதன் மூலம், உலகளாவிய சுற்றுலாத்துறை மீண்டும் தடைபட்டுள்ளதாகவும், ஆனால் இலங்கை தடுப்பூசி திட்டத்தினால், அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கை மீது கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் கூறினார்.

உத்தேச அமைச்சரவை மாற்றத்தின் கீழ் சுற்றுலாத்துறை அமைச்சர் பதவியை நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும், நல்ல நேரம் இல்லாத காரணத்தால் அந்த மாற்றம் பிற்போடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதில் முக்கிய பங்காற்றிய முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, வெளிநாட்டினரை நாட்டுக்கு ஈர்க்கும் வகையில் பல காணொளிகளை வெளியிட்டுள்ளார்.

கடந்த 29ஆம் திகதி உனவடுன பிரதேசத்திலுள்ள டட்லி சிறிசேனவிற்குச் சொந்தமான ஹோட்டல் ஒன்றில் பதிவுசெய்யப்பட்ட காணொளியொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 

 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி