தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக வலம்  வருபவர்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. இந்த பிரபலமான காதல் ஜோடிகள் எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதனிடையே இவர்கள் இருவரும் சேர்ந்து வெளியிட்டுள்ள திரைப்படம் ராக்கி, சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் தற்போது இவர்கள் இருவரும் புத்தாண்டை கொண்டாட துபாய்க்கு சுற்றுலா  சென்றுள்ளனர். அங்கு பல்வேறு இடங்களுக்கு இருவரும் சேர்ந்து சுற்றுலா சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தற்போது வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கடைசியாக நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் இயக்கும் ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். நடிகை சமந்தா இன்னொரு ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்துவிட்டது.

இதையடுத்து அட்லீ இயக்கத் தில் ஷாருக்கான் ஜோடியாக, இந்தி படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. இதன் ஷூட்டிங், புனே அருகே சமீபத்தில் நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி