தெற்காசிய பிராந்தியத்திலேயே அதிக பணவீக்கம் பதிவாகியுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம் பெற்றுள்ளது. நாட்டின் பணவீக்க விகிதம் 12.1ஆக அதிகரித்துள்ளது.

ஆசியப் பிராந்தியத்தில் இலங்கை ஆறாவது அதிக பணவீக்கத்தை கொண்டுள்ளது. சர்வதேச நாடுகளின் பணவீக்க விகிதத்தில் இலங்கை 20ஆவது இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

trading economics இணையத்தளத்தை கோடிட்டு கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த ஒரு மாதகாலத்தில் மரக்கறிகள், உடன்மீன் போன்ற உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருள், போக்குவரத்துக்கட்டணம் போன்ற உணவல்லாப்பொருட்கள், சேவைகளின் விலைகள், கட்டணங்களில் ஏற்பட்ட அதிகரிப்பே இப்பணவீக்க உயர்விற்குப் பிரதான காரணமாக அமைந்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி