இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசி உணவுப் பொருட்களடங்கிய 1500 கொள்கலன்கள் டொலர் விநியோகிக்காமையால் துறைமுகத்தில் காத்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

இந்த கொள்கலன்களை விடுவிப்பதற்குத் தேவையான டொலரை வழங்குமாறு வர்ததக அமைச்சு மத்திய வங்கியிடம் கோரியுள்ளதுடன், அதற்கு சரியான பதில் இதுவரை கிடைக்கவில்லையென செய்திகள் கூறுகின்றன. டொலர் வழங்குவதற்காக மேலும் ஒருமாதகால அவகாசம் தேவையென மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கொள்கலங்களை விடுவிப்பதற்கு இரண்டரை கோடிக்கும் மேற்பட்ட அமெரிக்க டொலர் தேவைப்படுகிறது.

எதிர்வரும் மாதத்தில் செலுத்த வேண்டிய 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிலுவையில் இருப்பதால் அத்தியாவசியப் பொருட்களுக்கு டொலர் செலவழிப்பதை விட கடனைத் திருப்பிச் செலுத்துவதில் முன்னுரிமையளிக்க மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி