பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருந்த ஆசிரியரும் கவிஞருமான அஹ்னாப் ஜஸீமை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அஹ்னாப் தலா 300,000 ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார். ஜசீமை விடுதலை செய்ய உத்தரவிட்ட புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி நவோமி விக்கிரமசிங்க, .டிசம்பர் 15 புதன்கிழமை (இன்று) தெரிவித்தாவதுஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் அவரை புத்தளம் பயங்கரவாதத் தடுப்புச் சட்ட அலுவலகத்திற்கு சென்று கையொப்பமிடுமாறு உத்தரவிட்டுள்ளார்.

அஹ்னாப் ஜசீமின் வெளிநாட்டுப் பயணத்திற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக மாகாண செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜசீம், 2020 மே 20 அன்று பொலிஸ் பயங்கரவாத ஒடுக்குமுறை மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

அவரது அடிப்படை உரிமை மனு டிசம்பர் 8ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, ​​அஹ்னாப் ஜசீமுக்கு பிணை வழங்குவதற்கு சட்டமா அதிபர் எதிர்க்கவில்லை என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

புத்தளம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின் போது, ​​அஹ்னாப்பிற்கு பிணை வழங்குவதற்கு சட்டமா அதிபர் எதிர்க்கவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி நெரின் புள்ளே நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.

2017 ஆம் ஆண்டு நவரசம் கவிதைத் தொகுப்பை வௌியிட்டு மாணவர்கள் 'தீவிரவாத சித்தாந்தத்தைப்' பின்பற்ற ஊக்குவித்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் மன்னார் அஹ்னாப் என்று தமிழ் வாசகர்களிடையே பிரபலமாக அறியப்பட்ட அஹ்னாப் ஜசீம், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினால் (CTID) கைது செய்யப்பட்டார். 

மே 16, 2020 அன்று கைது செய்யப்பட்ட அவர், கடந்த ஜூன் மாதம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி