நெருக்கமானவர்களுக்கு நீங்கள் வாழ்நாள் முழுவதும் கொடுக்கும் தண்டனை என நடிகர் சூர்யா கூறி உள்ளார்.தமிழகத்தில் நீட் தேர்வால் மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துக் கொள்ளும் நிலையில் மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக நடிகர் சூர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்ற பாரதியாரின் பாடல்வரிகளுடன் தனது உரையை தொடங்குகிறார்.

மாணவிகள் மாணவர்கள் எல்லோரும் வாழ்க்கையில் அச்சமில்லாமல் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு போன வாரம் அல்லது போன மாசம் இருந்த ஏதோ ஒரு பெரிய கவலை அல்லது வேதனை இப்போ இருக்கிறதா. யோசிச்சு பாருங்க. நிச்சயமாக குறைந்திருக்கும். இல்லாமல் கூட போயிருக்கும்.

ஒரு பரிட்சை உங்களது உயிரை விடப் பெரியது இல்லை. உங்க மனசுக்கு கஷ்டமா இருக்கா நீங்க நம்புறவங்க, உங்களுக்கு ரொம்ப பிடிச்சவங்க, அப்பா அம்மா இல்ல ஒரு பெரியவங்க, நண்பர்கள் ஆசிரியர்கள் யாரிடமாவது மனதை விட்டு பேசுங்கள்.

எல்லாவற்றையும். பயம், கவலை, வேதனை, விரக்தி எல்லாம் கொஞ்ச நேரத்தில் குறைய வேண்டிய விஷயங்கள். தற்கொலை, வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன் என்றும் முடிவு செய்வதெல்லாம் உங்களை ரொம்ப விரும்புபவர்களுக்கு, அப்பா அம்மா குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் வாழ்நாள் தண்டனை. மறந்துவிடாதீர்கள்.

நான் நிறைய தேர்வுகளில் பெயிலாகி இருக்கிறேன். குறைவான மார்க் வாங்கி இருக்கிறேன். அதனால் உங்களில் ஒருவனாக நிச்சயமாக சொல்ல முடியும். மதிப்பெண், தேர்வு இது மட்டுமே வாழ்க்கை அல்ல. சாதிக்கிறதுக்கு அத்தனை விஷயங்கள் இருக்கு. உங்களை புரிந்து கொள்ளவும் நேசிக்கவும் நிறைய பேர் இருக்கோம். நம்பிக்கையா.. தைரியமாக இருந்தால் வாழ்க்கையில் எல்லாரும் ஜெயிக்கலாம். நிச்சயமாக ஜெயிக்கலாம். அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே… என்று கூறி உள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி