அரசாங்கத்தின் தலைவிதி மக்கள் நீதிமன்றத்தில் முடிவு செய்யப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொவிட் பேரழிவால் வேறு எந்த நாடும் காணாத வக்குரோத்து நிலையை, இலங்கை அடைந்து வருகிறது. தன்னிச்சையான, தூரநோக்கற்ற பொறுப்பற்ற நிர்வாகத்தால் கடுமையான விளைவுகளை நாடு எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

அரசாங்கம் தனது அரசியல் மற்றும் சுயநல நிகழ்ச்சி நிரல்களுடன் நாட்டு மக்களின் வாழ்க்கையை நசுக்குகின்றது. மேலும் இந்தத் துயரத்தை நாட்டின் எதிர்கால சந்ததியினரும் அனுபவிக்க நேரிடும் என்பதை அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும்.

முறைசாரா மூடிய பொருளாதார முறையை நோக்கி நகர்ந்த மூலம் சமீப காலத்தில் உலகில் வேறு எந்த நாடும் எடுக்காத முட்டாள்தனமான முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது. அதன் தீவிர விளைவுகளை மிக விரைவில் சந்திக்க நேரிடும். அரசாங்க அமைச்சர்கள் ஒவ்வொரு நாளும் நாட்டிற்கு நகைச்சுவைச் செய்திகளையே சொல்கின்றனர். நாட்டில் எழுந்துள்ள எந்த ஒரு பிரச்சினைக்கும் அவர்களிடம் பதில் இல்லை.

மக்கள் மூன்று வேளை அல்ல ஒரு வேளை போசாக்கு உணவை எடுக்க முடியாது மிகவும் ஆதரவற்ற நிலையில் இருக்கும் நேரத்தில், சில அரசாங்க சார்பான நாடாளுமன்ற ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவை இரண்டு வேளைக்கு அல்லது ஒரு வேளைக்கு மட்டுப்படுத்துமாறு கூறி அறிக்கைகளை வெளியிடும் அளவிற்கு அரசாங்கத்தின் சுபீட்ச அலை உள்ளது.

இந்தப் பேரழிவு தருணத்தில் கூட, பல அத்தியாவசிய பொருட்களின் கடுமையான பற்றாக்குறை நிலவுவதோடு, மறுபுறம், பொருட்களின் விலைகள் அசாதாரணமாக உயர்ந்துள்ளன. தாங்கமுடியாத வகையில் பொருட்களின் விலை உயரும் நிலையில்  பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் உணவுக்காக வரிசைகளில் காத்திருக்கும் சகாப்தம் உருவாகி வருகின்றன.

பிரச்சினைகள் எழும்போதெல்லாம், எழுந்துள்ள பிரச்சினைக்கு ஒரு நீடித்த தீர்வை வழங்காது அரசாங்கம் மண்டை ஓடுகளையும் பிரமுகர்களையும் மாற்றுவதைத் தவிர வேறு எதையும் செய்யாதுள்ளது.

இந்த நாட்டின் பொருளாதாரக் கொள்கை முற்றிலும் மாற வேண்டும் என்றாலும், தற்போதைய அரசாங்கம், போலித்தனத்தைச் செயல்படுத்துவதன் மூலம், ஒரு இசை நாற்காலி போட்டியைத் தொடங்கியுள்ளது.

இந்தநிலையில் மக்கள் எதிர்கொள்ளும் துரதிர்ஷ்டவசமான விதியிலிருந்து அவர்களை மீட்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், அரசாங்கத்தின் தலைவிதியை மக்கள் நிதீமன்றத்தின் முன் முடிவு செய்வதை தடுக்க முடியாது போகும் என்று சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார். 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி