கொத்தலாவல சட்டமூலத்தை ரத்துச் செய்யுமாறு ஆர்ப்பாட்டம் செய்தமையால் பொய் குற்றம் சுமத்தி கைது செய்த எதிர்ப்பாளர்கள் மூவருக்கு தனிமைப்படுத்தல் தடுப்பு முகாமில் கொரோனா தொற்றியிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

முன்னிலை சோஷலிஸக் கட்சியின் சமீர கொஸ்வத்த, அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே, ஜயவர்தனபுர பல்கலைக் கழக மாணவர் சஙகத் தலைவர் அமில சந்தீப ஆகிய மூவருக்குமே கொரோனா தொற்றியுள்ளது.

ஓகஸ்ட் 03ம் திகதி பத்தரமுல்ல, பாராளுமன்ற சந்திக்கு அருகாமையில் பாதையில் நடைபெற்ற மாணவர் மக்கள் இயக்கத்தின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள், மாணவர் சங்கங்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கலைந்து சென்றதன் பின்னர், மாணவர் மக்கள் இயக்கத்தின் கோஷிலா ஹன்ஸமாலி கைது செய்யப்பட்டார்.

முன்னிலை சோஷலிஸக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் சமீர கொஸ்வத்த அன்றிரவு கைது செய்யப்பட்டார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழக மாணவர் சங்கத்தின் தலைவர் அமில சந்தீப பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக செல்லும் போது ஒகஸ்ட் 05ம் திகதி கடத்தப்பட்டார். அன்றிரவு தொலைக்காட்சி விவாதமொன்றில் பங்கேற்றுவிட்டு திரும்பிச் செல்லும் வழியல் 06ம் திகதி அதிகாலையில் அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் கொழும்ப ரிமாண்ட சிறையில் (CRP) தடுத்து வைக்கப்பட்டனர். அங்கு இவர்களுக்கு அன்டிஜன் மற்றும் PCR பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பரிசோதனை முடிவுகளின்படி இவர்களுக்கு கொவிட் 19 வைரஸ் தொற்றியிருக்கவில்லை.

அதன் பின்னர், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பதுளை, தல்தென தடுப்பு முகாமில் 25ம் திகதி மேற்கொண்டPCR பரிசோதனைகளின் முடிவுகளுக்கேற்ப மூவருக்கும் கொவிட் வைரஸ் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்படி தனிமைப்படுத்தல் முகாம் எனக் கூறி நூற்றுக்கணக்கானவர்களை எவ்வித பொறுப்புடமையுமின்றி தடுத்து வைத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அவர்களை மருத்துவ சிகிச்சைக்காவது அனுப்பவில்லையென அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் சுட்டிக்காட்டுகிறது. மாணவர் மக்கள் தலைவர்களுக்கு பிணை வழங்காமல் தடுத்து வைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ள அரசாங்கத்தின் திட்டத்தின்படி இந்த மூவரும் கொரோனா தொற்றுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் கூறுகிறது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி