மட்டக்களப்பில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த விதுசனின் உடலை உடல்கூற்று பரிசோதனைக்காக கொழுப்புக்கு மாற்றுமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த ஜூன் மாதம் 3ம் திகதி சந்திரன் விதுசன் எனும் இளைஞன் ஐஸ் போதைப்பொருள் வியாபாரம் செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சுமார் இரவு 10.45 மணியளவில் கைது செய்யப்பட்ட நிலையில் மறுநாள் காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சடலமாக ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

குறித்த வழக்கு விசாரணை இன்று மட்டக்களப்பு நீதவான் நீதி பதி ஏ.சி ரிஸ்வான் முன்னிலையில் இன்று வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது

புதைக்கப்பட்ட விதுஷசனின் உடலை மீண்டும் கடந்த ஜூன் மாதம் தோண்டி எடுத்து பேராதனைப் பல்கலைக்கழகத்தினுடைய பேராசிரியர் முன்னிலையில் மீளவும் பிரேத பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அந்த வகையில் தோண்டி எடுக்கப்பட்ட விதுசனின் உடலம் அனுராதபுரத்திற்கு எடுத்து செல்ப்பட்டிருந்த நிலையில் குறித்த சடலத்தின் மீதான பிரேத பரிசோதனையின் அறிக்கை கிடைக்காத காரணத்தினால் இன்றையதினம் உடல் கூற்று பரிசோதனைக்காக கொழும்புக்கு மாற்றபட்டுள்ளதாக அவருடைய தந்தை தெரிவித்துள்ளார்.இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 28ம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி