இலவசக் கல்வியின் இராணுவமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கலை இலக்காகக் கொண்ட கொத்தலாவல சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மற்றும் பலவந்தமாக கைது செய்யப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்கள்,மாணவர்களின் தடுப்புக்காவலை நீடிக்க  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்கள் கொவிட் தொற்றுநோய் காரணமாக இருப்பதாகக் கூறி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் நேற்று [11] கடுவெல மேலதிக நீதிபதி சந்தியா தல்துவா முன்னிலையில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​அவர்களை 17 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிட்டார்.

கொத்தலாவல சட்டத்திற்கு எதிராக ஜெயவர்த்தனபுர பாராளுமன்றம் அருகே நடந்த போராட்டத்தில் 3ம் திகதி அவர்களது வீட்டிற்குச் சென்ற பொலிசார் முன்னிலை சோசலிஸ்ட் கட்சியின் நிர்வாகச் செயலாளர் சமீர கொஸ்வத்த மற்றும் மாணவர் இயக்கத்தின் செயற்பாட்டாளரான கோஷிலா ஹன்சமாலி ஆகியோரை  பலவந்தமாக கைது செய்தனர்.மற்றும் 5 ம் திகதி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டுவந்த ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அமில சந்தீபா அதிகலை 3.30 மணியளவில் பொலிசாரால் பல்கலைக்கழகத்திற்கு அருகில் வைத்து பலவந்தமாக கடத்தப்பட்டார். மற்றும் அணைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உற்பட​ நான்கு அரசியல் ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்கள் மஹரகம ஓஐசிக்கு காயம் ஏற்படுத்தியதாகவும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விலைவித்ததாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி