இலங்கை இராணுவத்தினரால் கொரோனா தடுப்பூசி ஏற்றுவதற்கான நடமாடும் வாகன சேவை இன்று (12) முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.

மேல் மாகாணத்தில் வசிக்கும் விசேட தேவையுள்ள மற்றும் முதியவர்களுக்கு, அவர்கள் வசிக்கும் இடங்களுக்கே சென்று தடுப்பூசி ஏற்றுவதற்காக இந்த சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் 10 மணியிலிருந்து இந்த சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

தடுப்பூசி ஏற்றுவதற்காக இராணுவத்தினரின் 10 நடமாடும் வாகனங்கள் சேவையில் ஈடுபடவுள்ளன.

1906 மற்றும் 0112 860 002 எனும் இலக்கங்களுக்கு அழைப்பை அழைப்பை ஏற்படுத்தி பதிவு செய்து கொள்ளுமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி