இலங்கை மக்கள், ராஜபக்ச ஆட்சியில் வெறுப்படைந்துள்ளதாகவும், ஆகவே அரசியல் ரீதியிலான புதிய மாற்றம் ஒன்றிற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் மக்கள் விரக்தி அடைந்துள்ளதாகவும், இந்த நிலைமை தொடரும் பட்சத்தில் ராஜபக்ச குடும்பத்தில் அனைவருக்கும் எதிர்காலமே இல்லாமல் போகும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

கொழும்பு அபயராம விகாரையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

இன்று என்ன பேசினாலும், என்ன கதை சொன்னாலும், இந்த ஆட்சியை ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகவே மாறியுள்ளது. இன்று எங்கள் நாடு பல சிக்கல்களுக்கு உள்ளாகியுள்ளது.

சரியான இடத்தில் சரியாக வேலை செய்ய சரியான ஆட்கள் இல்லை, சரியான ஒரு தொடர்பாடல் இல்லாமல் உள்ளது. சரியான ஒரு அரசியல்வாதி, சரியான ஒரு அதிகாரி என யாருமே இன்று இல்லை, இன்று தெளிவாக விளங்குகின்றது, மக்கள் பலத்தை கொடுத்தாலும், பலத்தை எடுத்தாலும் என்றும் இல்லாதவாறு மக்களுக்கு இன்று பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவே நேர்ந்துள்ளது.

எங்களுக்கு தெரியும், சிலருக்கு பதவி பலம் கிடைத்துவிட்டால் அகங்காரம் கூடிவிடும். இன்று விசேட வைத்திய நிபுணர்கள் சாதாரண வேலைக்காரர்களாக மாறியுள்ளார்கள். விசேட வைத்திய நிபுணர்கள் என பெயர் மட்டும் தான் உள்ளது.

மிகவும் மன வேதனைக்கு நாட்டு மக்கள் உள்ளாகியுள்ளார்கள். பௌத்த தர்மத்தின் போதனையில் ஒரு விடயம் உள்ளது "நீ செய்து கொண்டதை நீயே அனுபவி" என்று சொல்லப்படுகின்றது, இன்று எமக்கும் அந்த நிலைமை தான் வந்துள்ளது.

வேறு ஒன்றும் இல்லை. மஹிந்த ராஜபக்சவுக்கு என்ன சொன்னோம், மக்களின் அபிமானம் வென்ற முப்படைகளின் தளபதி என போற்றப்பட்டார், ஆனால் மஹிந்த ராஜபக்ச அவர்களே இன்னும் சில நாட்களில் நீங்கள் மக்கள் மனங்களில் இருந்து முற்றாக அகற்றப்படுவீர்கள்.

நீங்கள் இப்படியே இருந்தால் அது நிச்சயம் நடக்கும். நீங்கள் மட்டும் அல்ல எதிர்காலத்தில் ராஜபக்ச குடும்பத்தில் அனைவருக்கும் எதிர்காலமே இல்லாமல் போகும் ஒரு நிலை வரும் என்பது எமக்கு நன்றாக தெரிகிறது.

எங்களுடைய அடுத்தகட்ட நடவடிக்கையாக மக்களையும் இணைத்து கொண்டு இப்பொழுது பொறுத்தது போதும் என, இனியும் பார்த்துக்கொண்டு இருக்காமல் நாட்டிற்கு உகந்த மக்களுக்கான திட்டங்களை ஆரம்பிக்க உள்ளோம். விசேட வைத்திய நிபுணர்கள் நாட்டை முடக்க சொல்கின்றர்கள்.

நாங்களும் அதையே தான் சொல்கின்றோம், நாட்டை மூடுங்கள், நாட்டு மக்களுக்கு உணவை கொடுத்து, தடுப்பூசிகளை சரியாக வழங்கி இந்த நாட்டை வழிநடத்த முடியும். ஆனால் அது எதனையும் இவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.

சுத்தியுள்ள கள்வர்களும், திருடர்களும், சொல்வதை கேட்டு தான் வேலை செய்கின்றார்கள். இதனால் இந்த நாட்டில் அனைவரும் தற்பொழுது வெறுப்படைந்துள்ளார்கள் என குறிப்பிட்டுள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி