அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய தலைவர் அமில சந்தீப ஆகியோர் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரையும் கடுவலை பிரதம நீதவான் மஞ்சுள ரத்நாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியல் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Stein கலையகத்தில் இடம்பெற்ற ”மாவத்த” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பிய வசந்த முதலிகே இரத்மலானை – பொருப்பனை பகுதியில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.

பொருப்பனை வீதியில் அமைந்துள்ள நான்காவது பொறியியலாளர் பிரிவு இராணுவப் படைத்தளத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் வீதித் தடையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுக்கான காரணத்தை அவர் வினவிய போது, அநாவசிய ஒன்றுகூடல், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இவருடன் கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர்கள் மூன்று பேர் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் தொடர்பான வழக்கு கொழும்பு பிரதம நீதவான் புத்திக ஶ்ரீ ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

யாரேனும் ஒருவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு போதுமான குற்றச்சாட்டுகள் காணப்பட்டால் மாத்திரமே கைது செய்ய முடியும் என அறிவித்த நீதவான், நாட்டிலுள்ள பொதுமக்களை கைது செய்து மன்றில் ஆஜர்படுத்த வேண்டாம் எனவும் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி