நீர்கொழும்பில் வடக்கு,கிழக்கு உள்ளிட்ட முழு நாடும் இராணுவமயமாக்கப்படுவதற்கு எதிராக ஒரு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 5 வியாழக்கிழமை மாலை நீர்கொழும்பில் தொடங்கப்பட்ட இந்த போராட்டம் கிறிஸ்தவ ஒற்றுமை இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.

கொத்தலாவல சட்டத்தை திரும்பப் பெறுங்கள்! வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாடு முழுவதும் இராணுவமயமாக்கப்படுவதை நிறுத்தக் கோரி பதாதைகளை ஏந்தியவாறு, 'அதிபர்கள், ஆசிரியர்கள், அரசியல் ஆர்வலர்கள் கலந்து கொண்டு கல்வியை இராணுவமயமாக்க வேண்டாம், இலவச கல்வியில் கை வைக்க வேண்டாம்,இராணுவமயமாக்கலை எதிர்க்கிறோம்' போன்ற கோஷங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் சமூக இடைவெளியைப் பேணி முகக்கவசங்களை அணிந்தனர்.

சிவில் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், சீருடை அணிந்த ஏராளமான பொலிசார் ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்திற்கு அருகில் கடமையில் இருந்ததாக தெரிவித்தனர்.  

224263868 694245285309004 367398323500503187 n219896602 694245061975693 8469978612218982825 n


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி