2021 க.பொ.த. உயர் தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஒன்லைன் முறை மூலம் மாத்திரம் அங்கீகரிக்கப்படுமென, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித அறிவித்துள்ளார்.

அதற்கமைய இன்று (05) முதல் ஜூலை 30 வரை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்கள இணையத்தளம்  www.doenets.lk  அல்லது  www.onlineexams.gov.lk/eic இன் ஊடாக அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் கையடக்கத் தொலைபேசி செயலியான 'DoE' ஊடாக விண்ணப்பிக்க முடியுமென, சனத் பூஜித அறிவித்துள்ளார்.

அரசாங்க பாடசாலைகளில் கற்கும் மாணவர்கள் உரிய பாடசாலையின் அதிபர்கள் ஊடாக அதிபர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (User Name) கடவுச்சொல் (Password) மூலம் இவ்விண்ணப்பங்களை மேற்கொள்ள முடியுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனிப்பட்ட பரீட்சார்த்திகள் உரிய ஆலோசனைகளைப் பின்பற்றி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அதன் அச்சுப் பிரதியை பெறுவதோடு, உரிய சந்தர்ப்பத்தில் காண்பிக்கும் வகையில் தம்வசம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் தகவல்கள் அவசியமாயின் பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் மூலம் பரீட்சைகள் திணைக்களத்தை தொடர்பு கொள்ளலாம்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி