பொதுநலவாய நாடுகளின் 6000 சிறுகதை எழுத்தாளர்களில் இலங்கையை சேர்ந்த ஒரு எழுத்தாளர் முதன் முறையாக சிறுகதைக்கான விருதை வென்றுள்ளார்.

முன்னாள் பத்திரிகையாளரான கன்யா டி அல்மெய்தாவிற்கு 2021 பொதுநலவாய நாடுகளின் சிறுகதைப் போட்டியில் ஆசிய படைப்பாளர்களிடையே சிறந்த படைப்பிற்கான விருதை வென்றுள்ளார்.

பிரித்தானியாவின் முன்னாள் காலனித்துவ நாடுகளிலிருந்து பங்கேற்ற 6000க்கும் மேற்பட்ட படைப்பாளர்களிருந்து 4 பேர் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர் அவர்ளில் கான்யா எழுதிய ‘I Cleaned The—’ படைப்பிற்கு ஆசிய விருது கிடைத்துள்ளது.

அவரது சிறுகதையானது, வீட்டு உழைப்பு, கைவிடுதல், வீடுகளுக்குள் மனித உறவுகள் மற்றும் தூசுகளாக்கப்பட்ட மனித வாழ்வு சம்பந்தமான கதையாகும். ஆசிய போட்டிப் பிரிவின் நடுவரும், பங்களாதேச எழுத்தாளருமான கதெமுல் இஸ்லாம் அதனை விளக்கும் போது, இலங்கையில் ரம்புட்டான் மற்றும் கராம்பு மரங்களுக்கிடையிலான காதலையும், வாழ்வையும் பற்றி எழுதப்பட்ட கதையாகுமெனக் கூறியுள்ளார். அன்பு, வானத்தின் நட்சத்திரங்களுக்கிடையிலல்ல, ஓரங்கட்டப்பட்ட மனித வாழ்வில் காணலாம் என்று கண்யாவின் வெற்றிகரமான படைப்பை அவர் பாராட்டுகிறார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி