இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மட்டக்களப்பிலுள்ள வீட்டிற்கு முன்பாக பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் கான்ஸ்டபிள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் டிப்பர் சாரதி ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்த துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டின் முன்பாக பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள், அவ்வழியாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் சாரதியின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

உயிரிழந்த டிப்பர் சாரதிக்கும் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கும் இடையில் சிறிது நாட்களின் முன்னர் தகராறு ஏற்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்ற போது இராஜாங்க அமைச்சர் அவரது வீட்டில் இருக்கவில்லை.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி