மட்டக்களப்பு இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த் 3ம் திகதி புலனாய்வுப்பிரிவினர் எனக் கூறி வந்தவர்களினால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்ட இளைஞன் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த சந்திரன் விதுஷன் எனும் இளைஞனின் சடலத்தினை தோண்டியெடுத்து இலங்கையிலேயே சிறந்த நிபுணத்துவம் வாய்ந்த பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் முன்னிலையில் மீள் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 3ம் திகதி மட்டக்ளப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ஏ.இளங்கோவன் அவர்களின் தலமையிலான சட்டவைத்தியர்களினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறித்த இளைஞன் அதிகளவான ஜஸ் போதைப்;பொருள் பைகளை வாயில் போட்டு விழுங்கியதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியானது என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியிருந்தனர்.

இவரின் மரணம் தொடர்பான வழக்கில் மரணமானவரின் குடும்பத்தினர் சாட்சியம் அளிக்கையில் தங்களின் மகனின் பிரேத பிரிசோதயில் சந்தேகம் இருப்பதாக அதற்கான நீதி கிடைக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.குறித்த வழக்கானது இன்று(18) கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீதிபதியின் அறையில் நீதிமன்ற நீதிவான் ஏ.சி.றிஸ்வான் அவர்களின் முன்நிலையில் வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டது.

புதைக்கப்பட்ட விதுஷனின் உடலை வருகின்ற திங்கட்கிழமை தோண்டி எடுத்து இலங்கையில் மிகவும் அனுபவம் வாய்ந்த பேராதனை பல்கலைக்கழகத்தினுடைய பேராசிரியர் அவர்களின் தலமையில் பிரேத பரிசோதனை செய்ய நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி