திரிஷ்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தேவஸ்ரீ உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் எலநாடைச் சேர்ந்தவர் பாலசந்திரன் இவரது மூத்த மகள்  திரிஷ்யா(  வயது 21)  இவரை அவருடன் படித்த பள்ளி நண்பர் வினீஷ் வினோத் ( 21) ஒருதலையாக காதலித்து வந்தார். திரிஷ்யா எங்கு சென்றாலும் அவரை வினோத் பின் தொடர்ந்து சென்றார்.

இது குறித்து திரிஷ்யா தனது தந்தையிடம் தெரிவித்தார் இது குறித்து கடந்த ஏப்ரல் மாதம் பாலசந்திரன் பொலீசில் புகார் அளித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வினோத் கடந்த 16 ந் திகதி பாலசந்திரனின் கடைக்கு தீவைத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வினோத் நேற்று காலை திரிஷ்யாவின் வீட்டுக்கு சென்று உள்ளார். வீட்டின் கீழ் பகுதி பூட்டப்பட்டு  இருந்தது  கதவை உடைத்து திறந்து உள்ளே  சென்ற வினோத் மேல் மாடியில் இருந்த திரிஷ்யாவை தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார். அதை தடுக்க வந்த  திரிஷ்யாவின் சகோதரி தேவஸ்ரீக்கும் கத்திகுத்து விழுந்தது.  திரிஷ்யா சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தார். தேவஸ்ரீ  உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தப்பிக்க முயன்ற வினோத்தை ஆட்டோ ஓட்டுனர் ஜவகர் என்பவர் பிடித்து பொலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். வினோத் சட்டக்கல்வி படித்து வந்துள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி