பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கடைசி மகனான ரோஹித ராஜபக்ஷ தற்போது தங்கியிருக்கும் வீட்டின் பெறுமதி 30 கோடி ரூபாவுக்கு மேல் என சமகி மஹரகம நகர சபை உறுப்பினர் தனுஷ்க ராமநாயக்க தெரிவித்துள்ளார்.இணையத்தளம் ஊடாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார். எனினும் அந்த வீடு ரோஹித ராஜபக்ஷவின் பெயரில் உள்ளதா என்பது தனக்து தெரியாது. ஆனால் 30 ரூபா கோடி ரூபா பெறுமதியான வீட்டில் வசிக்கின்றார் என்பது மாத்திரமே தனக்கு தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரோஹித ராஜபக்ஷவின் பிறந்த நாள் அன்று அங்கு சிலர் கூடி பிறந்த நாள் கொண்டாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இது தொடர்பில் ரோஹித ராஜபக்ஷவிடம், ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போதிலும் அவர் இதுவரையிலும் பதிலளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் கேட்ட போது, குறித்த வீட்டில் தனது தம்பி வாழ்வதாகவும் வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அவரது பிறந்த நாள் அன்று அங்கு விருந்துகள் அல்லது மக்கள் ஒன்றுக்கூடும் சம்பவங்கள் இடம்பெறவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி